இந்த தலைமுறை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டிய 6 விஷயங்கள்!

இந்த தலைமுறை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டிய 6 விஷயங்கள்!

October 26, 2016 0 By pcfjojo@gmail.com

காலத்திற்கு ஏற்ப நாம் உடல், தொழில்நுட்பம், வீட்டு அலங்காரம், சம்பளம், கார், மொபைல் என அனைத்தையும் மாற்றிவிட்டோம். ஆனால், குழந்தை வளர்ப்பில் மட்டும் மிக பின்தங்கிய நிலையை அடைந்து நிற்கிறோம். இன்று எத்தனை பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் தினமும் நேரம் செலவிட்டு, இன்று என்ன செய்தாய் என்று கேட்கிறார்கள். குழந்தைகள் என்ன முதலில் கணவன், மனைவி உறவில் முதலில் ஒருவரை, ஒருவர் விசாரித்துக் கொள்கிறோமா? இல்லை. பணத்தை விரட்டும் ஓட்டத்தில் குழந்தை வளர்ப்பில் கோட்டைவிட்டு நிற்கிறோம்…. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஃப்ரெண்ட்ஷிப் ரெக்குவஸ்ட்! ஊர், பெயர் தெரியாத நபர்களுக்கு, பெண் குழந்தைகள் ஆண்களுக்கும், ஆண் குழந்தைகள் பெண்களுக்கும் ஃபேஸ்புக்கில் ஃப்ரெண்ட்ஷிப் ரெக்குவஸ்ட் கொடுக்க வேண்டாம். பிரபலங்கள் என்றால் ஃபாலே செய்து அவர்களது அப்டேட்ஸ் பார்த்துக் கொள்ளலாம். கேட்ஜெட் ஃப்ரீக்! நம்மிடம் அதிநவீன, சந்தையில் புதியதாக வெளியான கேட்ஜெட்டுகள் இருக்கின்றன என்பதால், அது இல்லாதவரை இழிவாக எண்ண வேண்டாம். அது அவர்களுக்கு தேவையற்றதாக கூட இருக்கலாம். மதிப்பு, மரியாதை! காசுக் கொடுத்து வாங்கும் ஒரு பொருளின் மதிப்பும், மரியாதையும் அறிந்திருக்க வேண்டும். அப்பா வங்கிக் கொடுத்தார், அவருக்கு இதெல்லாம் ஜுஜூபி, இது தொலைந்தால் அல்ல உடைத்தால் வேறு ஒன்று புதியதாக வாங்கி கொடுப்பார் என்ற அலட்சிய எண்ணம் குழந்தைகள் மனதில் பிறக்காமல் வளர்க்க வேண்டும். விளையாட்டு! விளையாட்டு என்பது மென்திரை தீண்டி ஆடுவது அல்ல. புழுதி பறக்க, ஓடியாடி, கை, கால்களில் காயங்கள் ஏற்பட வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு சிராய்ப்பு காயங்கள் என்றால் என்ன என்ற அறியாமை பிறந்துவிட்டது. எனவே, நல்ல விளையாட்டை கற்றுக் கொடுங்கள். அந்தரங்கம்! முகநூல், ட்விட்டர் போன்ற பொது தளங்களில் அந்தரங்க விஷயங்கள் பகிர்வது தவறு. பர்சனல் டைரி என்ற ஒன்றை நீங்கள் எதற்கு பயன்படுத்தினீர்கள். அந்தரங்கம் என்றால் என்ன, சுய தகவல் பாதுகாப்பு என்றால் என்ன என்பதை எல்லாம் நீங்கள் முக்கியமாக கற்றுக் கொடுக்க வேண்டும். வெற்றி, தோல்வி… மொபைல் செயலி விளையாட்டுகளில் தோல்வி அடைந்தாலே பெரிதாய் மனம் நொந்து போய்விடுகின்றனர் இன்றைய குழந்தைகள். எனவே, உண்மையான வெற்றி என்ன, தோல்வி என்ன, இவற்றை எப்படி கடந்து வர வேண்டும். ஸ்மார்ட் போன்களை கடந்து வெளியே இருக்கும் நிஜ வாழ்க்கை என்ன? என்பனவற்றை புகட்ட வேண்டும்.