Home / History / புளோரஸ் தீவின் மர்மம் நிறைந்த குள்ளர்கள்

புளோரஸ் தீவின் மர்மம் நிறைந்த குள்ளர்கள்

மர்மம் நிறைந்த குள்ளர்கள் 

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் தீவு  அழகுடன், அறிவியல் அதிசயங்கள் பலவற்றையும் தன்னகத்தே மறைத்து வைத்துள்ளது . இங்குள்ள பழங்குடியின சந்ததியினர் ‘நெல்லிஸ் குயா’ என்று அழைக்கப்படுகின்றனர். மிகவும் பழமை வாய்ந்த பழங்குடியினர்களின் பட்டியலில் புளோரஸ் தீவின் ‘நெல்லிஸ் குயா’ மக்களும் இடம் பிடித்துள்ளனர்.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சிகளுக்காக, ஆராய்ச்சியாளர்கள் செல்லும் அங்குள்ள பழங்குடியின மக்கள், விசித்திர குள்ள மனிதர்களின் கதைகளையும் கூறுகின்றனர்.

‘புளோரஸ் மலைகளுக்குப் பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்கள் பெரிதாகவும், உடல் முழுவதும் ரோமம் மூடியும் காணப்படும்.

மற்றவர்களுக்கு புரியாத மொழியும் பேசுவார்கள். குள்ளர்கள் பழங்குடியின கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து, பயிர்கள், உணவுப் பொருட்கள், பழங்களை திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் குள்ளர்களை ‘எபுகோகோ’ என்று மூதாதையர்கள் அழைப்பார்கள்’ என்று விசித்திர குள்ளர்களின் கதை நீள்கிறது.

இதுபோன்ற கதை புளோரஸ் தீவில் மட்டுமல்லாமல், இந்தோனேஷியாவின் ஏராளமான கிராமங்களிலும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ‘பழங்குடியின மக்களின் கற்பனை’ என்று புறந்தள்ளப்பட்ட இந்த குள்ளர்களின் கதை, தற்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா பழங்குடியின மக்கள் வசித்து வரும் கிராமத்தில் இருந்து சுமார் 75 மைல் தொலைவில் ஒரு குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவை சேர்ந்த தொல் பொருள் ஆய்வுக் குழுவினர், டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தலைமையில் அந்தக் குகையை ஆராய்ந்தனர். அப்போது 19 அடி ஆழத்தில் சிறிய உருவத்திலான எலும்பு கூடுகளுடன், பல மிருகங்களின் எலும்புகளையும் கண்டுபிடித்தனர்.

ஆரம்பத்தில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதினர். ஏனெனில் இதன் மொத்த உயரமே மூன்று அடிதான். குழந்தையின் எலும்புக்கூடு என்ற கோணத்திலே ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்களுக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது.

பழங்குடியின மக்கள் கூறிய கதைகளை ஒப்பிட்டு பார்த்த ஆராய்ச்சியாளர்கள், சிறிய அளவிலான எலும்புகூட்டை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் இதுவரை யாரும் அறியாத புதிய மானிட இனத்தின் எலும்பு கூடுகள் அவை என்பதை உணர்ந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயது பெண்ணுடையது.

விரிவான ஆராய்ச்சியில், இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோ மட்டுமே. மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும், சிக்கல் நிரம்பியதாகவும் இருந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்களை போன்றே குள்ளர்களும் வேட்டையாடுதல், வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம், ஒளிந்திருந்து தாக்குதல், பதுங்குதல் போன்றவற்றையும் சிக்கலான சிறிய அளவு மூளைகளை கொண்டே நிகழ்த்தி உள்ளனர். கண்டெடுக்கப்பட்ட 3 அடி உயர பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது பற்றி டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் கூறும் பொழுது, ‘மனித வரலாற்றில் 18 ஆயிரம் ஆண்டுகள் என்பது நெருக்கமான ஒன்று தான். இந்த குள்ள மனிதர்கள் இன்றும் கூட, அடர்த்தியான காடுகளில் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இந்தப் புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறுகின்றார்

About Ano

Check Also

மூழ்கிப் போன தமிழ் வரலாறு

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *