குழந்தைகளுக்கான சத்தான உணவுகள் சில

குழந்தைகளுக்கான சத்தான உணவுகள் சில

November 17, 2016 0 By Ano

பருப்பு வகைகளில் 

பருப்பு வகைகளில் அதிகமான புரதச்சத்து மற்றும் தாதுச்சத்து நிரம்பியுள்ளது. இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உடலில் உள்ள தேவையான கொழுப்பை தக்க வைக்கவும் புரதச் சத்து உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஆகாரமாகவும் பருப்பு வகைகள் உள்ளன. முந்திரி, வேர்க்கடலை, பாதாம் போன்றவைகள் அதிக சத்துக்கள் நிறைந்த பருப்புகளாகும்.

முட்டை

இதில் அதிகப்படியான புரதச் சத்து, தாதுச்சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டை என்பது அதிக சத்துக்கள் அடங்கிய ஒரு மாத்திரை என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு முட்டையை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எளிதாக பல சத்துக்கள் கிடைத்து விடுகின்றன.

வாழைப்பழம் 

இதில் நார் சத்தும் உடலுக்குத் தேவையான பொட்டாசியசத்தும் அதிகப்படியாக காணப்படுகிறது. வாழைப்பழம் எலும்பு, சிறுநீரகம், இதயம் போன்றவற்றை பாதுகாக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

உலர் திராட்சை

இதனை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மற்றும் நார் சத்து எளிதாக கிடைக்கிறது. சாப்பிடுவதற்கு இணிப்பாகவும் சத்தானதாகவும் உள்ளதால் குழந்தைகளும் விரும்புவர். உலர் திராட்சையை சுடுநீரில் நன்கு கழுவிய பிறகே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில்  வைட்டமின்அதிகம் உள்ளது. இந்த வைட்டமின், காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய் தொற்று கிருமிகளை எதிர்த்துப் போராடி,  தடுக்கின்றன.

தேநீர்

தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு, நோய் எதிர்ப்பு செல்கள் அழியாமல் தடுக்கிறது. நோய் தொற்றை தடுக்கலாம்