Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/tamiltip/public_html/tamiltipstv/wp-content/themes/tamil tipstv/functions.php on line 73
iphone 8 கைப்பேசி தொடர்பில் புதிய விபரங்கள் வெளியானது - Tamil Tips TV
Home / Technology / iphone 8 கைப்பேசி தொடர்பில் புதிய விபரங்கள் வெளியானது

iphone 8 கைப்பேசி தொடர்பில் புதிய விபரங்கள் வெளியானது

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான ஆப்பிள் சில மாதங்களுக்கு முன்னர்தான் iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இக் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் நல்ல மவுசு காணப்படுகின்றது.

இந் நிலையில் அடுத்த வருடம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யக் காத்திருக்கும் iPhone 8 மற்றும் iPhone 8 Plus ஆகிய கைப்பேசிகளின் வடிவம் எப்படியிருக்கும் என்ற தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி இக் கைப்பேசிகளின் தொடுதிரையானது வலது, இடது புறங்களின் முழுப் பகுதிக்கும் (Bezel Free) பரந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொடுதிரையின் பரப்பளவு சற்று அதிகரித்திருக்கும்.

அதாவது iPhone 8 இன் தொடுதிரையானது 5 அங்குலமாகவும், iPhone 8 Plus இன் திரையானது 5.8 அங்குலமாகவும் அதிகரிக்கும்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள iPhone 7 மற்றும் iPhone 7 Plus ஆகியவற்றின் தொடுதிரைகள் முறையே 4.7 அங்குலமாகவும், 5.5 அங்குலமாகவுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About pcfjojo@gmail.com

Check Also

உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள்:

அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள்  நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை  சில …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *