குழந்தைகளின் எடை அதிகரிக்க

குழந்தைகளின் எடை அதிகரிக்க

November 21, 2016 0 By Ano

குழந்தைகள் எடை அதிகரிக்க  சரியான சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும்  அவ்வாறான உணவுகள் எது என்பன பற்றி பார்ப்போம்

சாதாரண கீரை சாதம், மாவுடுடன் மோர் சாதம், பால் கொழுக்கட்டை, மோதகம், ராகி உருண்டை, கருப்பட்டி சோளப் பணியாரம், உளுந்தங்களி, மாலாடு, கறிகோலா உருண்டை, சுறா மீன் புட்டு… இந்த உணவுகள் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கும்

அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, சிறுபருப்பு, துவரம்பருப்பு எல்லாவற்றிலும் சமபங்கு எடுத்துக்கொண்டு, நன்கு வறுத்து வெள்ளைத்துணி ஒன்றில் தளர்வாக முடிந்துகொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு, நீரின் மத்தியில் இது தொங்கும்படியாக பாத்திரத்தின் குறுக்கே ஒரு கம்பியில் கட்டி நீரைக் கொதிக்கவிட வேண்டும். நீரில் மூழ்கி இருக்கும் பொட்டலத்தின் தானியங்கள் நன்கு வெந்து,  புரதமும் சர்க்கரையும் பிற சத்துக்களும் நீரில் கஞ்சியாகக் கரைந்துவரும். இந்தக் கஞ்சி, உடலுக்கு மிக ஊட்டம் தந்து உடல் எடையை அதிகரிக்கவைக்கும்!

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகளில் ஒன்றாகும். அதிலும் ஒரு முட்டையில் 6 கிராம் புரோட்டீன் உள்ளது. ஆகவே இதனை தினமும் வேக வைத்து குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. உடலுக்கு மிக ஊட்டம் தந்து உடல் எடையை அதிகரிக்கவைக்கும்

நேந்திரம் வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலரவைத்துப் பொடித்துக்கொள்ளவும். அந்தப் பொடியில் துளி சுக்கு சேர்த்து, கஞ்சி காய்ச்சுவதுபோல காய்ச்சிக் கொடுக்க எடை கூடும்

வேர்க்கடலை வெண்ணெயிலும் புரோட்டீன் மற்றம் நல்ல கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளதால், இதனை குழந்தைகளுக்கு பிரட்டில் தடவிக் கொடுத்தால், ஆரோக்கியமான முறையில் அவர்களின் எடை அதிகரிக்கும்.

பாஸ்தாவை ஆலிவ் ஆயிலில் சமைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால், அது சுவையாக இருப்பதோடு, குழந்தைகளின் எடையையும் அதிகரிக்கும்