அமேஷான் தரும் அதிரடி வசதி

அமேஷான் தரும் அதிரடி வசதி

November 22, 2016 0 By pcfjojo@gmail.com

ஒன்லைன் வியாபாராத்தினை மேற்கொள்ளும் மிகப்பெரிய தளமான அமேஷான் ஆனது வரும் விடுமுறை காலத்தினை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது.

இவற்றின் தொடர்ச்சியாக Prime Membership கணக்கினைக் கொண்டிருப்பவர்களுக்கு மற்றுமொரு அதிரடிச் சலுகையை வழங்க முன்வந்துள்ளது.

அதாவது Prime Membership கணக்கு வைத்திருப்பவர்கள் வருடத்திற்குரிய சந்தாவாக 99 அமெரிக்க டொலர்களினை செலுத்த வேண்டும்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இத் தொகையில் அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டு 79 அமெரிக்க டொலர்கள் செலுத்தினால் போதும் என அமேஷான் அறிவித்துள்ளது.

எனினும் இவ் வசதியினை அமெரிக்காவை சேர்ந்த பயனர்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.