பற்களை வெண்மையாக்கும் வாழைப்பழத்தோல்

பற்களை வெண்மையாக்கும் வாழைப்பழத்தோல்

January 19, 2017 0 By Ano

 

உலகெங்கும் நுகரப்படும் மிகப்பிரபலமான பழங்களில் ஒன்றான வாழைப்பழம் வருடத்துக்கு 145மில்லியன் தொன்கள் உற்பத்தி செய்யப்படுவதாக 2011 இல் கணிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத்தோலை நீக்கிய பின்னரே வாழைப்பழம் சாப்பிடப்படுகிறது.

 

இயற்கை ஓர் அற்புதம்; அதன் கொடை மகத்தானது. அந்த வகையில், இயற்கையான முறையில் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அளிக்கக்கூடியவை பழங்களும் காய்கறிகளும். பழத்தைவிட, தோலில் அதிகச் சத்து உள்ளது என்பது பொதுவான கருத்து. மாதுளை, பலா உள்ளிட்ட பல பழங்களின் தோல்கள் கடினமானவையாக இருக்கும்; பயன்படுத்த முடியாது. ஆனால், கொய்யா, மாம்பழம், ஆப்பிள் போன்ற சில பழங்களைத் தோலுடன் சாப்பிட முடியும். இங்கே சில பழத் தோல்களும் அவற்றின் பயன்களும்

வாழைப்பழத்தில், வைட்டமின் சி, மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம் உள்பட ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதன் தோலைத் தவிர மற்ற அனைத்துப் பாகங்களையும் நாம் பயன்படுத்துகிறோம். தோலும்கூட பயன் தரக்கூடியதுதான். வாழைப்பழத் தோலை வெயிலில் நன்கு உலரவைத்து, அதைப் பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியில், மாவுச்சத்து, புரதச்சத்து நிறைவாக உள்ளது. இதை, பாலில் கலந்து பயன்படுத்தினால், அது முழு உணவாகச் செயல்படும்; பாலின் சுவையையும் கூட்டும். வாழைப்பழத்தோலின் உட்பகுதியைப் பற்களில் தேய்த்துவர, பல்லின் மஞ்சள் தன்மை நீங்கி, பளிச் வெண்மை பெறும்

வாழைப்பழமானது இனிப்பாகவும் மிருதுவாகவும் இருக்க அதன் தோலானது தடிமனாக, நார்ச்சத்து நிறைந்ததாக ஆனால் கொஞ்சம் கசப்பாக இருக்கும். முக்கியமாக, ஒரு வாழைப்பழம் முழுமையாக முற்றும்போதுதான் அதன் தோல் மெலிதாகவும் மேலும் இனிப்பாகவும் மாறுகிறதாம். அதற்கு எத்திலீன் எனப்படும் இயற்கையான தாவர ஹார்மோன் தான் காரணமாக இருக்கிறது. வாழைப்பழத் தோலில் இருக்கும் கடினமான பல்வேறு சர்க்கரைகளை எளிமையான சர்க்கரைகளாகவும், வாழைப்பழத்தை உறுதியாக வைத்திருக்கும் பெக்டின் எனப்படும் நார்ச்சத்தை உடைப்பதன் மூலம் வாழைப்பழத்தையும் சுலபமாக உடைந்துவிடும்படி மாற்றுவது ஆகியவை எத்திலீன் ஹார்மோனுடைய வேலைதான் என்பது குறிப்பிடத்தக்கது!

முக்கியமாக, தினசரி நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பல்வேறு ஊட்டச்சத்துகளின் மொத்த அளவுகளில் வாழைப்பழத்தில் அவை ஒவ்வொன்றும் எவ்வளவு இருக்கிறது என்பது ஆய்வு செய்யப்பட்டு பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது. நம் செரிமானத்துக்கு உதவும் தினசரி நார்ச்சத்தில் 12 சதவீதம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வளர்ச்சிக்கு அவசியமான வைட்டமின் சி அளவில் 17 சதவீதம், நாம் உட்கொள்ளும் உணவை ஆற்றலாக மாற்றும் திறன்கொண்ட வைட்டமின் பி6 அளவில் 20 சதவீதம், உடலிலுள்ள உயிரணுக்கள், திசுக்கள் மற்றும் உடல் பாகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவும் பொட்டாசியம் 12 சதவீதம், உடலின் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும் மெக்னீசியம் 8 சதவீதம் இருக்கிறதாம். 

ஆனால் மிகவும் சுவாரசியமாக, வாழைப்பழத்துடன் சேர்த்து அதன் தோலையும் உட்கொண்டால், அதிலிருக்கும் அதிக அளவிலான வைட்டமின் பி 6 மற்றும் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம், அதனுடன் சேர்த்து கொஞ்சம் நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை அனைத்தும் இலவச இணைப்பாக உடலுக்கு கிடைக்கும் என்கிறார் லாரா. அதெல்லாம் சரி, வாழைப்பழத் தோலை எப்படி உண்பது என்று கேட்டால், ஸ்மூதி எனப்படும் குளிர்பானமாக அல்லது எண்ணையில் பொரித்து, அவித்து அல்லது குறைந்தது பத்து நிமிடங்கள் வரை வேக வைத்து இப்படி ஏதாவது ஒரு வகையில் சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.