வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றம்

வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றம்

February 2, 2018 0 By Anith

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

வவுனியா மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு அண்மையில் மாற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், குறித்த வழக்கை வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றுமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.