மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து

February 7, 2018 0 By Anith
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதமடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ளது.  கடந்த வெள்ளி கிழமை இரவு சுமார் 10.30 மணிக்கு மேல் இதனருகே அமைந்த கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மேற்கு சித்திரை வீதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உடனே அருகில் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாகின.
இந்த சம்பவத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சில கல் உத்திரங்களும் இடிந்தன. மண்டபம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனினும் சுந்தரேசுவரரையும், மீனாட்சி அம்மனையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதமடைந்த பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்தது.