பாரீஸில் கடுமையான பனிப்பொழிவு

பாரீஸில் கடுமையான பனிப்பொழிவு

February 10, 2018 0 By Anith

பிரான்ஸ் தலைநகர்  பாரீஸில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக கடந்த 6- ம் தேதி முதல் ஈபிள் கோபுரம் மூடப்பட்டுள்ளது.  பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் வரலாறு காணாத பனிப்பொழிவு செவ்வாய் முதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1887-ம் ஆண்டில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு 12 செ.மீட்டர் உயரத்துக்கு பனி கொட்டிக்கிடக்கிறது. இதனால்  பாரிஸ் பகுதியில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது என பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாரம் அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக நூற்றுக்கணக்கான கார்களில்  ஓட்டுனர்கள் சிக்கிக்கொண்டனர். பிரெஞ்சு தலைநகரில் மிக மோசமான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.

ஈபிள் கோபுரத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை வரை இது மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பனிப்பொழிவுகளைத் தொடர்ந்து நாட்டின் நான்கில் ஒரு பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.