மாஸ்கோவில் விமான விபத்து;71 பேர் உயிரிழப்பு

மாஸ்கோவில் விமான விபத்து;71 பேர் உயிரிழப்பு

February 11, 2018 0 By Anith

ரஷ்யாவின் டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே வீழ்ந்து நொறுங்கியுள்ளது.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது.

இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு சரடோவ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான உள்ளூர் விமானமொன்று 65 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்டது.

இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன், ரேடாரின் தொடர்பிலிருந்தும் விடுபட்டது.

இந்நிலையில், மாஸ்கோவில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் விமானம் வீழ்ந்து நொறுங்கியதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த விமானத்தில் பயணம் செய்த 71 பேரும் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகத்தை மேற்கோள் காட்டி CNN செய்தி வௌியிட்டுள்ளது.