சட்டம் இடம்கொடுத்தால் விடுதலை-தமிழக முதல்வர்

சட்டம் இடம்கொடுத்தால் விடுதலை-தமிழக முதல்வர்

March 11, 2018 0 By Anith

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நபா்களை சட்டம் இடம் கொடுத்தால் விடுதலை செய்யலாம் என்று முதல்வா் பழனிசாமி தொிவித்துள்ளாா்.

சிங்கப்பூா் சென்றுள்ள ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபா்களை மன்னித்து விட்டதாக தொிவித்தாா். இது தொடா்பாக முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவா் கூறுகையில், சட்டத்தின் படி அனைத் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சட்டம் வழிசெய்தால் அவா்கள் விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தொிவித்தாா்.

தொடா்ந்து பேசுகையில், காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினா்கள் கடந்த 5 நாட்களாக அவையை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். நாடாளுமன்ற உறுப்பினா்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுவது அரசியல் நோக்கம் கொண்டது.

காவிாி நடுவா் மன்றம் தொடா்பாக 2006ம் ஆண்டிலேயே தீா்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அப்போது தி.மு.க. தான் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டு இருந்தது. மேலும் மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்துக் கொண்டு இருந்தது. அப்போது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் அப்போதே மேலாண்மை வாாியம் அமைக்கப்பட்டிருக்கலாம். அதனை செய்யாமல் தற்போது எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும் என்று கூறுவது அரசியல் நோக்கத்துடன் கூடியது.