ராஜீவ்  கொலையாளிகளை மன்னித்துவிட்டோம்-மலேசியாவில் ராகுல்

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டோம்-மலேசியாவில் ராகுல்

March 11, 2018 0 By Anith

ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக, ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி, கோலாலம்பூரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் பல ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மை பாதித்தது.

நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம். ஆனால், எப்படியோ அதனை முற்றிலும் மன்னித்து விட்டோம்.

பிரபாகரன் இறந்து கிடப்பதை தொலைக்காட்சியில் பார்த்த போது, எனக்குள் இரண்டு உணர்வுகள் எழுந்தன.

ஏன் இந்த மனிதனை அவர்கள் இப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பது முதலாவது.

இரண்டாவதாக, அது அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் உண்மையில் கெட்டது என்று உணர்ந்தேன்.

இந்த அனுபவத்தில் இருந்து வந்த நாம், அதனைப் புரிந்து கொள்கிறோம்.

வெறுப்பை வெளிப்படுத்துவோரைக் கண்டுபிடிப்பது உண்மையில் மிகவும் கடினம். எந்த வகையான வன்முறைகளையும் நான் விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.