இன்று முடிவு எட்டப்படவில்லை

இன்று முடிவு எட்டப்படவில்லை

April 3, 2018 0 By Anith

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய இரண்டாவது சந்திப்பும் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் நாளை காலை மீண்டும் கூடி பேச்சு நடத்தவுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இன்று மதியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்றக் குழுவினர் கூடினர். எனினும், இதன்போது தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பை நடத்தியிருந்தார்.

பின்னர் இன்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கூட்டமைப்பு சந்திப்பொன்றைநடத்தியுள்ளது.

இதையடுத்து, இறுதி முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு மீண்டும் மாலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது. எனினும் இதன்போதும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், நாளை காலை 10 மணியளவில் மீண்டும் கலந்துரையாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன