ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுப்பேன்-ரணில்

ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுப்பேன்-ரணில்

April 4, 2018 0 By Anith

நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சற்று முன்னர் பாராளுமன்ற கட்டடிடத் தொகுதியில் நடந்த விசேட ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்து செல்வோம்.

இது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை எவ்வாறு கொண்டு செல்வது என்று தீர்மானம் எடுக்கப்படும்.

அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியில் மறுசீரமைப்பு மேற்கொண்டு கட்சியை பலமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.