Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in /home/tamiltip/public_html/tamiltipstv/wp-content/themes/tamil tipstv/functions.php on line 73
History – Tamil Tips TV http://www.tamiltipstv.com Thu, 05 Apr 2018 19:26:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=4.9.8 http://www.tamiltipstv.com/wp-content/uploads/2016/10/cropped-tamiltvtips_logo_512x512-32x32.png History – Tamil Tips TV http://www.tamiltipstv.com 32 32 தமிழர் பலர் அறிந்திராத வீர தமிழிச்சி http://www.tamiltipstv.com/2017/03/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5/ http://www.tamiltipstv.com/2017/03/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5/#respond Tue, 21 Mar 2017 10:03:36 +0000 http://www.tamiltipstv.com/?p=2269 தமிழர் பலர் அறிந்திராத வீர தமிழிச்சி

The post தமிழர் பலர் அறிந்திராத வீர தமிழிச்சி appeared first on Tamil Tips TV.

]]>
தமிழர் பலர் அறிந்திராத வீர தமிழிச்சி

The post தமிழர் பலர் அறிந்திராத வீர தமிழிச்சி appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2017/03/21/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b5/feed/ 0
உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கின்றதா??? http://www.tamiltipstv.com/2017/02/28/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae/ http://www.tamiltipstv.com/2017/02/28/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae/#respond Tue, 28 Feb 2017 04:44:14 +0000 http://www.tamiltipstv.com/?p=2246 குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.  குழந்தை உடல் எடை குறைந்து, நோஞ்சானாக இருக்கும். பசி குறைந்திருத்தல், மலக்கட்டு, ஜீரணம் இன்றி மலம் கழிதல், நீர் அல்லது சீதமுடன்கூடிய வயிற்றுப்போக்கு… என, பச்சிளங்குழந்தைகள் மந்தமாக இருப்பதைத்தான் மாந்த நோய்களாக அடையாளம் காட்டினார்கள் நம்மவர்கள்.

The post உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கின்றதா??? appeared first on Tamil Tips TV.

]]>
குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.  குழந்தை உடல் எடை குறைந்து, நோஞ்சானாக இருக்கும். பசி குறைந்திருத்தல், மலக்கட்டு, ஜீரணம் இன்றி மலம் கழிதல், நீர் அல்லது சீதமுடன்கூடிய வயிற்றுப்போக்கு… என, பச்சிளங்குழந்தைகள் மந்தமாக இருப்பதைத்தான் மாந்த நோய்களாக அடையாளம் காட்டினார்கள் நம்மவர்கள்.

The post உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கின்றதா??? appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2017/02/28/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%ae/feed/ 0
விஞ்ஞானம் கூறமுன்பே சங்கின் பெருமைகளை நம் முன்னோர்கள் கூறியவை http://www.tamiltipstv.com/2017/02/23/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ http://www.tamiltipstv.com/2017/02/23/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/#respond Thu, 23 Feb 2017 04:27:57 +0000 http://www.tamiltipstv.com/?p=2222 விஞ்ஞானமே கண்டு வியக்கும் தமிழன் சாதனை

The post விஞ்ஞானம் கூறமுன்பே சங்கின் பெருமைகளை நம் முன்னோர்கள் கூறியவை appeared first on Tamil Tips TV.

]]>
விஞ்ஞானமே கண்டு வியக்கும் தமிழன் சாதனை

The post விஞ்ஞானம் கூறமுன்பே சங்கின் பெருமைகளை நம் முன்னோர்கள் கூறியவை appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2017/02/23/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9e%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/ 0
புளோரஸ் தீவின் மர்மம் நிறைந்த குள்ளர்கள் http://www.tamiltipstv.com/2016/11/16/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8b%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/ http://www.tamiltipstv.com/2016/11/16/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8b%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/#respond Wed, 16 Nov 2016 08:55:07 +0000 http://www.tamiltipstv.com/?p=1893 மர்மம் நிறைந்த குள்ளர்கள்  இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் தீவு  அழகுடன், அறிவியல் அதிசயங்கள் பலவற்றையும் தன்னகத்தே மறைத்து வைத்துள்ளது . இங்குள்ள பழங்குடியின சந்ததியினர் ‘நெல்லிஸ் குயா’ என்று அழைக்கப்படுகின்றனர். மிகவும் பழமை வாய்ந்த பழங்குடியினர்களின் பட்டியலில் புளோரஸ் தீவின் ‘நெல்லிஸ் குயா’ மக்களும் இடம் பிடித்துள்ளனர். பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சிகளுக்காக, ஆராய்ச்சியாளர்கள் செல்லும் அங்குள்ள பழங்குடியின மக்கள், விசித்திர குள்ள மனிதர்களின் கதைகளையும் கூறுகின்றனர். ‘புளோரஸ் மலைகளுக்குப் பின்னால் விசித்திர …

The post புளோரஸ் தீவின் மர்மம் நிறைந்த குள்ளர்கள் appeared first on Tamil Tips TV.

]]>
மர்மம் நிறைந்த குள்ளர்கள் 

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் தீவு  அழகுடன், அறிவியல் அதிசயங்கள் பலவற்றையும் தன்னகத்தே மறைத்து வைத்துள்ளது . இங்குள்ள பழங்குடியின சந்ததியினர் ‘நெல்லிஸ் குயா’ என்று அழைக்கப்படுகின்றனர். மிகவும் பழமை வாய்ந்த பழங்குடியினர்களின் பட்டியலில் புளோரஸ் தீவின் ‘நெல்லிஸ் குயா’ மக்களும் இடம் பிடித்துள்ளனர்.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சிகளுக்காக, ஆராய்ச்சியாளர்கள் செல்லும் அங்குள்ள பழங்குடியின மக்கள், விசித்திர குள்ள மனிதர்களின் கதைகளையும் கூறுகின்றனர்.

‘புளோரஸ் மலைகளுக்குப் பின்னால் விசித்திர குள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கண்கள் பெரிதாகவும், உடல் முழுவதும் ரோமம் மூடியும் காணப்படும்.

மற்றவர்களுக்கு புரியாத மொழியும் பேசுவார்கள். குள்ளர்கள் பழங்குடியின கிராமங்களுக்குள் அடிக்கடி புகுந்து, பயிர்கள், உணவுப் பொருட்கள், பழங்களை திருடிக்கொண்டு ஓடிவிடுவார்கள். எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இந்தக் குள்ளர்களை ‘எபுகோகோ’ என்று மூதாதையர்கள் அழைப்பார்கள்’ என்று விசித்திர குள்ளர்களின் கதை நீள்கிறது.

இதுபோன்ற கதை புளோரஸ் தீவில் மட்டுமல்லாமல், இந்தோனேஷியாவின் ஏராளமான கிராமங்களிலும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ‘பழங்குடியின மக்களின் கற்பனை’ என்று புறந்தள்ளப்பட்ட இந்த குள்ளர்களின் கதை, தற்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டு புளோரஸ் தீவில் நெல்லிஸ் குயா பழங்குடியின மக்கள் வசித்து வரும் கிராமத்தில் இருந்து சுமார் 75 மைல் தொலைவில் ஒரு குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவை சேர்ந்த தொல் பொருள் ஆய்வுக் குழுவினர், டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் என்பவர் தலைமையில் அந்தக் குகையை ஆராய்ந்தனர். அப்போது 19 அடி ஆழத்தில் சிறிய உருவத்திலான எலும்பு கூடுகளுடன், பல மிருகங்களின் எலும்புகளையும் கண்டுபிடித்தனர்.

ஆரம்பத்தில் இந்த எலும்புக் கூடு ஒரு சிறிய குழந்தையின் எலும்பாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதினர். ஏனெனில் இதன் மொத்த உயரமே மூன்று அடிதான். குழந்தையின் எலும்புக்கூடு என்ற கோணத்திலே ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்களுக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது.

பழங்குடியின மக்கள் கூறிய கதைகளை ஒப்பிட்டு பார்த்த ஆராய்ச்சியாளர்கள், சிறிய அளவிலான எலும்புகூட்டை முழுவதுமாக ஆராய்ந்தனர். அதில் இதுவரை யாரும் அறியாத புதிய மானிட இனத்தின் எலும்பு கூடுகள் அவை என்பதை உணர்ந்தனர். கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு சுமார் 30 வயது பெண்ணுடையது.

விரிவான ஆராய்ச்சியில், இவர்களின் மொத்த உயரமே சராசரி 3 அடிதான். அதாவது 3 வயது குழந்தையின் உயரம்தான். இவர்களின் மொத்த உடல் எடை 25 கிலோ மட்டுமே. மூளை அமைப்பு மிகச்சிறியதாகவும், சிக்கல் நிரம்பியதாகவும் இருந்திருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் மனித பரிணாம வளர்ச்சி கொள்கை தலைகீழாக புரண்டு விட்டது. பெரிய மூளையுடைய மனிதர்களை போன்றே குள்ளர்களும் வேட்டையாடுதல், வேட்டை கருவிகளை கூர்மையாக உருவாக்கும் நுட்பம், ஒளிந்திருந்து தாக்குதல், பதுங்குதல் போன்றவற்றையும் சிக்கலான சிறிய அளவு மூளைகளை கொண்டே நிகழ்த்தி உள்ளனர். கண்டெடுக்கப்பட்ட 3 அடி உயர பெண் எலும்புக்கூடு சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இது பற்றி டாக்டர்.ரிச்சர்ட் ராபர்ட் கூறும் பொழுது, ‘மனித வரலாற்றில் 18 ஆயிரம் ஆண்டுகள் என்பது நெருக்கமான ஒன்று தான். இந்த குள்ள மனிதர்கள் இன்றும் கூட, அடர்த்தியான காடுகளில் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்னும் விரிவாக ஆய்வு நடத்தினால் இந்தப் புதிய இனத்தைப் பற்றி மேலும் அறியலாம் என்று கூறுகின்றார்

The post புளோரஸ் தீவின் மர்மம் நிறைந்த குள்ளர்கள் appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2016/11/16/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8b%e0%ae%b0%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf/feed/ 0
மூழ்கிப் போன தமிழ் வரலாறு http://www.tamiltipstv.com/2016/10/25/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1/ http://www.tamiltipstv.com/2016/10/25/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1/#respond Tue, 25 Oct 2016 13:43:11 +0000 http://tamiltipstv.com/?p=1211 மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன், என் னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங் கள் . இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் …

The post மூழ்கிப் போன தமிழ் வரலாறு appeared first on Tamil Tips TV.

]]>
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு
அழைத்துக் செல்லவிருக்கிறேன், என் னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங் கள் .

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்து ள்ளது.

ஆம் இதுதான் “நாவலன் தீவு”என்று அழைக்கப்பட்ட “குமரிக் கண்டம்.கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிகி கொண்
டிருக்கும் இது, ஒரு காலத்தி ல் பிரம்மாண்டமாக இயங்கி க்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரே லியா, தென் ஆப்ரிக்க, இலங் கை, மற்றும் இன்றுள் ள சில சிறு, சிறு தீவுகளை இணை த்தவாறு இருந்த ஒரு பிரம் மாண்டமான இடம் தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழு முன் பலைநாடு, ஏழு பின் பலைநாடு, ஏழு குன்ற  நாடு,ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு
நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடி யுள்ளது!!.குமரிக்கொடு,மணிமலை என இர ண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம் மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச்சங்கங்கள் 9990 வருடங்கள் தொட
ர்து நடை பெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில் “கி. மு 4440 இல் 4449 புலவர் களுடன், சிவன் , முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர் களும் இணைந்து,” பரிபாடல், முதுநாரை, முடு குருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் “ஆகிய நூல்க ளை இயற்றப் பட்டது.

இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள் களுடன்
“அகத்தியம், தொல்காப்பியம், பூத புரா ணம், மாபுராணம்” ஆகிய நூல்களை  இயற்றப்பட்டது . இதில் “தொல் காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன் றாம் தமிழ்ச் சங்கம் இன் றைய “மதுரை யில்”கி.மு 1850 இல் 449 புலவர்கள்க ளுடன்”அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்
படுத் தவேண்டிய இந்திய அரசு எந்த அக்க றையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்!!!!.. இந்திய அரசு வெளிக் கொண்டு வராத நம் வரலாற் றை நாமே இந்த உலகி ற்கு பரப்புவோம், இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர் கள் என்ற பழங் கதையை விட்டுவிட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமை யுடன் கூறுவோம். வரலாற்று தேடல் தொட ரும்………!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

இதுபோன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வ தற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே! முடிந்தவரை அனைவரும் இதனைப்படித்து விட்டு நண்பர்க ளுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்!.

The post மூழ்கிப் போன தமிழ் வரலாறு appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2016/10/25/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1/feed/ 0
திருக்குறள் http://www.tamiltipstv.com/2016/10/24/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d/ http://www.tamiltipstv.com/2016/10/24/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d/#respond Mon, 24 Oct 2016 20:16:44 +0000 http://tamiltipstv.com/?p=1151 பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் …

The post திருக்குறள் appeared first on Tamil Tips TV.

]]>
பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.

 

7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

அறத்துப்பால்

பாயிரவியல்

    1. கடவுள் வாழ்த்து
    2. வான்சிறப்பு
    3. நீத்தார் பெருமை
    4. அறன் வலியுறுத்தல்

இல்லறவியல்

    1. இல்வாழ்க்கை
    2. வாழ்க்கைத் துணைநலம்
    3. புதல்வரைப் பெறுதல்
    4. அன்புடைமை
    5. விருந்தோம்பல்
    6. இனியவைகூறல்
    7. செய்ந்நன்றி அறிதல்
    8. நடுவு நிலைமை
    9. அடக்கமுடைமை
    10. ஒழுக்கமுடைமை
    11. பிறனில் விழையாமை
    12. பொறையுடைமை
    13. அழுக்காறாமை
    14. வெஃகாமை
    15. புறங்கூறாமை
    16. பயனில சொல்லாமை
    17. தீவினையச்சம்
    18. ஒப்புரவறிதல்
    19. ஈகை
    20. புகழ்

துறவறவியல்

    1. அருளுடைமை
    2. புலான்மறுத்தல்
    3. தவம்
    4. கூடாவொழுக்கம்
    5. கள்ளாமை
    6. வாய்மை
    7. வெகுளாமை
    8. இன்னாசெய்யாமை
    9. கொல்லாமை
    10. நிலையாமை
    11. துறவு
    12. மெய்யுணர்தல்
    13. அவாவறுத்தல்

ஊழியல்

    1. ஊழ்

பொருட்பால்

அரசியல்

    1. இறைமாட்சி
    2. கல்வி
    3. கல்லாமை
    4. கேள்வி
    5. அறிவுடைமை
    6. குற்றங்கடிதல்
    7. பெரியாரைத் துணைக்கோடல்
    8. சிற்றினஞ்சேராமை
    9. தெரிந்துசெயல்வகை
    10. வலியறிதல்
    11. காலமறிதல்
    12. இடனறிதல்
    13. தெரிந்துதௌiதல்
    14. தெரிந்துவினையாடல்
    15. சுற்றந்தழால்
    16. பொச்சாவாமை
    17. செங்கோன்மை
    18. கொடுங்கோன்மை
    19. வெருவந்தசெய்யாமை
    20. கண்ணோட்டம்
    21. ஒற்றாடல்
    22. ஊக்கமுடைமை
    23. மடியின்மை
    24. ஆள்வினையுடைமை
    25. இடுக்கண் அழியாமை

அமைச்சியல்

    1. அமைச்சு
    2. சொல்வன்மை
    3. வினைத்தூய்மை
    4. வினைத்திட்பம்
    5. வினைசெயல்வகை
    6. தூது
    7. மன்னரைச் சேர்ந்தொழுதல்
    8. குறிப்பறிதல்
    9. அவையறிதல்
    10. அவையஞ்சாமை

அங்கவியல்

    1. நாடு
    2. அரண்
    3. பொருள்செயல்வகை
    4. படைமாட்சி
    5. படைச்செருக்கு
    6. நட்பு
    7. நட்பாராய்தல்
    8. பழைமை
    9. தீ நட்பு
    10. கூடாநட்பு
    11. பேதைமை
    12. புல்லறிவாண்மை
    13. இகல்
    14. பகைமாட்சி
    15. பகைத்திறந்தெரிதல்
    16. உட்பகை
    17. பெரியாரைப் பிழையாமை
    18. பெண்வழிச்சேறல்
    19. வரைவின்மகளiர்
    20. கள்ளுண்ணாமை
    21. சூது
    22. மருந்து

ஒழிபியல்

    1. குடிமை
    2. மானம்
    3. பெருமை
    4. சான்றாண்மை
    5. பண்புடைமை
    6. நன்றியில்செல்வம்
    7. நாணுடைமை
    8. குடிசெயல்வகை
    9. உழவு
    10. நல்குரவு
    11. இரவு
    12. இரவச்சம்
    13. கயமை

காமத்துப்பால்

களவியல்

    1. தகையணங்குறுத்தல்
    2. குறிப்பறிதல்
    3. புணர்ச்சிமகிழ்தல்
    4. நலம்புனைந்துரைத்தல்
    5. காதற்சிறப்புரைத்தல்
    6. நாணுத்துறவுரைத்தல்
    7. அலரறிவுறுத்தல்

கற்பியல்

  1. பிரிவாற்றாமை
  2. படர்மெலிந்திரங்கல்
  3. கண்விதுப்பழிதல்
  4. பசப்பறுபருவரல்
  5. தனிப்படர்மிகுதி
  6. நினைந்தவர்புலம்பல்
  7. கனவுநிலையுரைத்தல்
  8. பொழுதுகண்டிரங்கல்
  9. உறுப்புநலனழிதல்
  10. நெஞ்சொடுகிளத்தல்
  11. நிறையழிதல்
  12. அவர்வயின்விதும்பல்
  13. குறிப்பறிவுறுத்தல்
  14. புணர்ச்சிவிதும்பல்
  15. நெஞ்சொடுபுலத்தல்
  16. புலவி
  17. புலவி நுணுக்கம்
  18. ஊடலுவகை

The post திருக்குறள் appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2016/10/24/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
மகாபாரதம் http://www.tamiltipstv.com/2016/10/24/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/ http://www.tamiltipstv.com/2016/10/24/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/#respond Mon, 24 Oct 2016 20:06:08 +0000 http://tamiltipstv.com/?p=1121 மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார்.பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18பருவங்களை 10 …

The post மகாபாரதம் appeared first on Tamil Tips TV.

]]>
மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார்.பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.

குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.

மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களைபடித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்

சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதிஎன்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.

இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.

சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.

அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.

இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன்என்ற குழந்தை பிறக்கிறது.

திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்;பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.

திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன்(தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச “பாண்டவர்கள்”என்று அழைக்கப்படுகிறார்கள்.

குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன். குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.

பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே(யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தைபாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்துபேரும்திரௌபதியை மணக்கின்றனர்.

பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.

சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை)யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.

இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில்நடைபெறுகிறது.

போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம்.பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன்அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.

பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.

The post மகாபாரதம் appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2016/10/24/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
ராணி லக்ஷ்மி பாய் http://www.tamiltipstv.com/2016/10/24/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/ http://www.tamiltipstv.com/2016/10/24/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/#respond Mon, 24 Oct 2016 19:23:00 +0000 http://tamiltipstv.com/?p=1101 ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும். பிறப்பு: 19 நவம்பர் 1828 பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா  இறப்பு: 18 ஜூன் 1858 தொழில்: …

The post ராணி லக்ஷ்மி பாய் appeared first on Tamil Tips TV.

]]>
ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 19 நவம்பர் 1828

பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா 

இறப்பு: 18 ஜூன் 1858

தொழில்: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட வீரர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில், அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு ‘மனு’ என்று அழைத்தனர்.

ஆரம்ப வாழ்க்கை

தனது நான்காவது வயதிலேயே அவரது தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், லக்ஷ்மிபை அவர்கள் அவர் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக்  கலைகளை முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றார்.

இல்லற வாழ்க்கை

1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851ல்,  அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக,  அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.

1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில்,  பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.

படையெடுப்பு

ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி,  லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

போர்

ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து,  ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.

இறப்பு

ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். போர்க்களத்தில் அவர் மயக்கமாக இருந்த போது, ஒரு பிராமணர் அவரை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே அவர் மரணமடைந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பின், மூன்று நாட்களில், குவாலியரை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது.

ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது. தனது வளர்ப்பு மகனான தாமோதரைப் பாதுகாப்பதே ராணி லட்சுமிபாய் அவர்களின் நோக்கமாக இருந்தது. அவரது கதை எதிர்வரும் சுதந்திர போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஆனது என்றால் அது மிகையாகாது.

காலவரிசை

1828: ராணி லட்சுமிபாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார்.

1842:  ஜான்சியின் மகாராஜா ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார்.

1851:  அவரது மகன் பிறந்து, பின்பு நான்கு மாதங்களிலேயே காலமானான்.

1853: ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார்.

1853: நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார்.

1857: ஜான்சி ராணி அவர்கள், அவரது அண்டை நாடுகளைப் படையெடுத்தார்.

1858: ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம் ஜான்சியை நோக்கி படையெடுத்தது.

1858: ஆங்கிலேயர்களின் போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தார்.

The post ராணி லக்ஷ்மி பாய் appeared first on Tamil Tips TV.

]]>
http://www.tamiltipstv.com/2016/10/24/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/feed/ 0